முட்டைக்கு நிலையான விலை கிடைக்காமையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதன் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார். எனவே இதற்கு நிலையான ஒரு தீர்வை வழங்குமாறு முட்டை வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.