விவசாய அமைச்சின் படி வாழை செய்கையை ஏற்றுமதி நிலைக்கு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மாத்திரம் 152,000 கிலோகிராம் புளிப்பு வாழைகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது.
இந்த வாழை அறுவடையை ஏற்றுமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 1 மெட்ரிக் டன் 600 முதல் 700 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 28,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிக்கான வாழைப்பழங்களை உற்பத்தி செய்வதற்கான முன்னோடித் திட்டங்களை பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.