Friday, Jan 17, 2025

புதுக்குடியிருப்பில் உணர்வுபூர்வமான சுனாமி நினைவேந்தல்

By jettamil

புதுக்குடியிருப்பில் உணர்வுபூர்வமான சுனாமி நினைவேந்தல்

சுனாமி பேரலைவில் உயிரிழந்தவர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பில் மிகுந்த உணர்வுடன் நடைபெற்றது.

tsunami 1

வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று (26) காலை 8:05 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு தொடங்கியது.

சுனாமி தாக்கத்தால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஐயனார்கோவிலடி சுனாமி நினைவு வளையில், உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

tsunami 2

இதன்பின்னர், பொது சுடர் ஏற்றப்பட்டு, பிறருடன் தொடர்ந்து மலர் மாலை அணிவித்து நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு