Friday, Jan 17, 2025

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நலன்புரி கொடுப்பனவு : புதிய வர்த்தமானி

By jettamil

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நலன்புரி : புதிய வர்த்தமானி

ஜனவரி 2025 முதல், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புதிய நடைமுறை குறித்து சமீபத்தில் ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 21.12.2024 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2024 மே மாதம் 17ஆம் திகதியிலான, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வர்த்தமானி அறிவித்தலை இந்த புதிய அறிவிப்பு இரத்துசெய்துள்ளது.

மேலும், மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபாவாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், மற்றும் சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த 5,000 ரூபா மற்றும் 17,000 ரூபா உதவிகள் வழங்கப்படும்.

மேலும், 960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீட்டு காலத்தை 31.03.2025 வரை நீட்டிக்கின்றது.

எனவே, 2024 மே 17ஆம் திகதியிலான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே பலன்களை பெற்றுள்ள மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட பயனாளிகளுக்கு, மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, தற்போது பரிசீலனையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும், தகைமையின் அடிப்படையில் 31.12.2024 வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக இந்த வர்த்தமானி அறிவிக்கின்றது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு