Welcome to Jettamil

நுவரெலியாவில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வு: போதைப்பொருளுடன் 30 பேர் கைது!

Share

நுவரெலியாவில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வு: போதைப்பொருளுடன் 30 பேர் கைது!

நுவரெலியாவில் சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரகரி வாவிக்கு அருகில் உள்ள நான்காவது வாகனத் தரிப்பிடப் பகுதியில் சனிக்கிழமை (ஒக்டோபர் 18) காலை ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 19) அதிகாலை வரையில் நடைபெற்றுள்ளது.

போதைப்பொருட்களுடன் களியாட்ட நிகழ்வு நடைபெறுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நுவரெலியா நகருக்குள் நுழையும் அனைத்துப் பிரதான வீதிகளையும் மறித்துச் சோதனைச் சாவடிகள் அமைத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட குஷ் கஞ்சா, ஐஸ், போதைப்பொருள் மாத்திரைகள், சிகரெட்டுகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கம்பஹா, மட்டக்குளி, வெல்லம்பிட்டிய, நீர்கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை