பக்கத்து வீட்டுக்குச் செய்வினை செய்த குடும்பப் பெண் – சிசிடிவி காட்சிகளால் அம்பலம்!
யாழ்ப்பாணத்தில் அண்டை வீட்டாருக்குச் சுடலைச் சாம்பல் மற்றும் விபூதி வீசிச் செய்வினை செய்ததாகக் கூறப்படும் குடும்பப் பெண் ஒருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
யாழ்ப்பாண பகுதியில், இரவு வேளையில் ஒரு பெண் அண்டை வீட்டின் நுழைவாயில் பகுதிக்கு அருகே வந்து, வாயினால் ஏதோ ஒரு விபூதி அல்லது சாம்பல் போன்ற பொடியை ஊதிச் செய்வினை செய்யும் காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
இதுபோன்ற மூடநம்பிக்கைச் செயல்கள் மூலம் அண்டை வீட்டாருக்கு அச்சுறுத்தல் விடுப்பது தண்டனைக்குரிய குற்றம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





