பிரபல நாட்டுப் புற இசைக்கலைஞரும், திரையிசைப் பாடகரும் பக்தியிசைப் பாடகரும் இசையமைப்பாளருமான மாணிக்கவிநாயகம் நேற்று காலமானார்.
அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் அவர் காலமானார்.
உயிரிழக்கும்போது அவருக்கு வயது 73 ஆகும்.
நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களைப் பாடிய அவர், ஈழத்தமிழர்களால் வெளியிடப்பட்ட பக்திப் பாடல்கள் பலவற்றையும் பாடியுள்ளார்.
தென்னிந்திய திரைத்துறையில் தில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், எண்ணூறுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தனது கணீர் என்ற குரலால் ரசிகர்களை ஈர்த்த மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.