Welcome to Jettamil

சற்று முன் திருகோணமலையில் பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

Share

திருமலையில் பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே இவ்வாறு ஸ்தளத்தில் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை