சாவகச்சேரி நகரப் பகுதியை அண்மித்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் 28/11 செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
அலுவலகத்தில் தண்ணீர் வரவில்லை என்ற காரணத்திற்காக தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேல் ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியதிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26வயதான கஜந்தன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார்.