யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது.
அதிகரிக்கும் இந்த காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக சுகாதார நடை முறைகளை அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் முதலாவது நீங்கள் உள்ளெடுக்கும் நீர் மற்றும் உணவு என்பவற்றின் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கொதித்தாறிய அல்லது குளோறின் மூலம் பரிகரிப்பு செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வீட்டில் சுத்தமாக தயாரித்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் எனவும் சமைத்த உணவுகளை பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமைக்காத பழங்கள் இலைக்காய்கறிகளை நன்கு கழுவி உண்ணுங்கள், உணவு தயாரித்தல், பரிமாறல், மலசலகூட பாவனை ஆகியவற்றின் பின்னர் சவர்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் ஆரோக்கியங்களில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.