Welcome to Jettamil

எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது…

Share

அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ப்ரோபைன் என்றழைக்கப்படும் இரசாயன வாயுவின் அளவு அதிகரித்தமையே இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்த ப்ரோபைனின் அளவு 30 வீதத்திற்கும் அதிகமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதாக அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை