Welcome to Jettamil

யாழில் சொகுசுப் பேருந்து மோதித் தள்ளியதில் மீன் வியாபாரி பலி

Share

யாழில் சொகுசுப் பேருந்து மோதித் தள்ளியதில் மீன் வியாபாரி பலி

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரி ஒருவரைச் சொகுசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (மீன் வியாபாரி) ஆவார்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வியாபாரியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துத் தொடர்பிலான விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை