100 அடி பள்ளத்தில் விழுந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி மீட்பு
சிவனொளிபாத மலைப் பகுதியில் சுற்றுலாவிற்குச் சென்றிருந்த இளம் பெண் ஒருவர் மலையிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிவனொளிபாத மலைப் பகுதியில் சுற்றுலாவிற்குச் சென்றிருந்த இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மலையிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்த 30 நிமிடங்களுக்குள் விசேட மீட்புப் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
செங்குத்தான பாறைகள் மற்றும் பாதுகாப்பற்ற சரிவுகள் காரணமாக கயிறுகளைப் பயன்படுத்தி மீட்புப் குழுவினர் பள்ளத்திற்குள் இறங்கினர்.
சுமார் 3 மணிநேர தீவிர தேடுதலுக்குப் பிறகு யுவதி பத்திரமாக மீட்கப்பட்டார்.
மலை உச்சிகளில் வேலி அமைக்கப்படாத பகுதிகளில் நடமாடும் போது சுற்றுலாப் பயணிகள் அதீத கவனம் செலுத்த வேண்டும் என அனர்த்த மேலாண்மை நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





