அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை, வர்த்தமானியில் இன்று வெளியிடப்படவுள்ளது
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கு இந்த வாரம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்துவதற்கான சுற்று நிருபம் இன்று இரவு வெளியிடப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையை அரசாங்க அலுவலக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது