Welcome to Jettamil

இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீளாய்வு

Share

தற்போதுள்ள விலைச்சூத்திரத்தின்படி, இன்னும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன தெரிவித்துள்ளார்.

விலைச்சூத்திரத்தின்படி விலைகள் மாதாந்த அடிப்படையில் திருத்தப்பட வேண்டும் என்றாலும், தேவைப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விலைகளை திருத்துவதற்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 24ம் திகதி முதல் விலை மாற்றம் அமுலுக்கு வந்தது.

அப்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  பெற்றோல் விலையை 24.3%மும், டீசல் விலையை 38.4% மும் உயர்த்தியது.

ஏப்ரல் 19 ஆம் திகதிக்குப் பின்னர், இரண்டாவது எரிபொருள் விலை உயர்வுடன், இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 420 ரூபாவாகவும், டீசல் விலை 400 ரூபாவாகவும், விற்கப்படுகிறது.

ஏப்ரல் மாத விலை உயர்வுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 24.3% அல்லது 82 ரூபாவினாலும், டீசல் 38.4% அல்லது லிட்டருக்கு 111 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்தின்படி அடுத்த விலை திருத்தம் ஜூன் 24 ஆம் திகதி அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும்,விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப விலைகள் திருத்தப்பட வேண்டிய சதவீதமானது தீர்மானிக்கப்படும் என்று மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை