Welcome to Jettamil

இரவோடு இரவாக அதிகரித்த எரிபொருட்கள் விலை…

Share

நேற்று நள்ளிரவில் இருந்து எரிபொருள்களில் விலைகளை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய 92 ஒக்ரேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 20 ரூபா அதிகரிக்கப்பட்டு, 177 ரூபாவாக விற்கப்படும்.

95 ஒக்ரேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 207 ரூபாவாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லீற்றருக்கு 10 ரூபா அதிகரிக்கப்பட்டு 121 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் விலை 15 ரூபா அதிகரிக்கப்பட்டு, 159 ரூபாவாகவும், விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் விலையும் லீற்றருக்கு 10 ரூபா அதிகரிக்கப்பட்டு, 87 ரூபாவாகவும் விற்கப்படும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை