கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: தக்சி உள்ளிட்ட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் நந்தகுமார் தக்சி மற்றும் மற்றொருவர் இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை, வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





