Welcome to Jettamil

தற்காலிக முடக்க நிலையை அறிவிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை

Share

அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்க நிலையை அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த விடயம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே , பாரிய வரிசைகளில் வாகனங்கள் காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளால் எரிபொருளைப் பெற முடியவில்லை.

ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர், புதிய எரிபொருள் கையிருப்பு நாட்டிற்கு வரும் வரை, இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, தற்காலிக முடக்க நிலையை அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தற்காலிக முடுக்க நிலை நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருளை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே பெறுவதை உறுதி செய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 10-ம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் காலத்தை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், இன்று தொடக்கம் ஒரு வாரத்துக்கு பாடசாலைகளை மூடுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, எரிபொருள் நெருக்கடியினால், நாடு பெருமளவில் முடக்க நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை