அரச ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க அரசு திட்டம்
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதமாக குறைக்க தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போதைய அரசு இந்த முடிவை எடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்து இலட்சத்திற்கும் அதிகமாக குறைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ அண்மையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார் என நலின் பண்டார கூறினார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆனால், இதுவரை அரசாங்கம் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கும் முடிவுக்கு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.