Friday, Jan 17, 2025

77வது தேசிய சுதந்திர தினம்: அநுர அரசாங்கம் எடுத்த தீர்மானம்

By jettamil

77வது தேசிய சுதந்திர தினம்: அநுர அரசாங்கம் எடுத்த தீர்மானம்

77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விழா நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு (30) நடைபெற்ற 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் முதல் ஏற்பாட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதை கருத்தில் கொண்டு, குறைந்த செலவில் நிகழ்வை நடத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் சுதந்திர தின விழாவுக்காக 107 மில்லியன் ரூபாய் செலவிட்டிருந்த நிலையில், இவ்வாண்டு செலவுகளை கட்டுப்படுத்தி இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அவர் மேலும் கூறினார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு