மத்திய வங்கியின் தலைவர்கள் இன்று அமைச்சரவைக்கு
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் தலைவர்கள் இன்று (04) அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை 70% உயர்த்திய சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்.
கடந்த திங்கட்கிழமை அமைச்சர்கள் சபை கூடிய போது மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட தலைவர்களை அமைச்சர்கள் சபைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் தலைவர்கள் நாளைய அரசாங்க நிதி தொடர்பான குழுவின் கூட்டத்திற்கும், கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளமை தொடர்பில் மேலும் ஆராய்வதற்காகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் மத்திய வங்கி அதிகாரிகள் நிதிக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.