புற்றுநோயாளிகளுக்காகத் தலைமுடி தானம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழந்தவர்களுக்கு விக் (Wig) தயாரித்து வழங்கும் நோக்கில், மாதம்பே பகுதியில் விசேட தலைமுடி தானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
‘நை சஹன’ (Nai Sahana) அமைப்பு இந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்திருந்தது.
நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தலைமுடி தானம் செய்தனர்.





