Welcome to Jettamil

இஷாரா செவ்வந்தி கைதானது எப்படி? – பொலிஸார் வெளியிட்ட முழு விவரம்!

Share

இஷாரா செவ்வந்தி கைதானது எப்படி? – பொலிஸார் வெளியிட்ட முழு விவரம்!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பதைப் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இஷாரா தப்பித்த பின்னணி

இஷாரா செவ்வந்தி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன் படகு மூலம் இந்தியாவுக்கும், பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் நேபாளத்துக்கும் தப்பிச் சென்றுள்ளார்.

அவர் நேபாளத்தில் போலி அடையாளத்துடன் சொகுசு வாடகை வீடு ஒன்றில் தலைமறைவாக இருந்ததாகவும், யாழ்ப்பாணப் பெண் ஒருவரின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த இடம் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்தன.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து ஒரு விசேட குழுவை நேபாளத்திற்கு அனுப்பியது.

இந்த விசேட குழுவினர், மூன்று நாட்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இஷாரா செவ்வந்தியை வெற்றிகரமாகக் கைது செய்தனர்.

இஷாரா செவ்வந்தியுடன், அவருக்கு உதவிய ஜேகே பாய் உட்பட மேலும் நால்வரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஏனைய சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை