Welcome to Jettamil

பயங்கரவாதச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை

Share

பயங்கரவாதச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கை அரசாங்கம் கொண்டுவரத் தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச அமைப்பு வலியுறுத்துகிறது.

ஒரு அறிக்கையில், மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையின் ஏனைய சர்வதேச பங்காளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சட்டமூலத்தை திருத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், பல தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்பிப்பதை ஒத்திவைக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இது தொடர்பில் உரிய விவாதம் நடத்தி சட்டமூலத்தை முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை