கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து, கொழும்பு மாநகர சபை (CMC), இன்று அக்டோபர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
பாதகமான வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக, மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசரகாலப் பதில் பிரிவுகள் முழுமையாகத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், தற்காலிக வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் உதவிகளுக்காக மாநகர சபையைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கான தொலைபேசி எண்: 011-2422222
அவசரத் தொலைபேசி எண்: 011-2686087





