Friday, Jan 17, 2025

வரி செலுத்துநர்களுக்கான முக்கிய அறிவித்தல்

By Jet Tamil

வரி செலுத்துநர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023/2024 வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்து முக்கிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (30) வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் என அறிவித்துள்ளது.

அறிக்கைகள் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணி தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்று வழமையான நேரத்தில் திறக்கப்படுவதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு