இந்திய – தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர், வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 26ந் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்ததொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 8ந் திகதி தென் ஆபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவாகியிருந்தது.
இந்தநிலையில், தென் ஆபிரிக்க அணியின் புயல்வேக பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்க்கியா ஆறாத காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எனினும் அவருடைய காயம் குறித்த விரிவான தகவல் இல்லை. அவர் ஏற்கனவே ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக யார் விளையாடுவார் என்ற தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.