Welcome to Jettamil

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Share

இலங்கை கடற்பரப்பில் சீன ஆராய்ச்சி கப்பல் வருவதால் இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்திய நிலையில் அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் புதிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

இதன்படி வெளிநாட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, இது தொடர்பான அமைச்சரவை அங்கீகாரமும் அண்மையில் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை