முகநூல் நபர் ஒருவர் விசாரணைகள் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டி கொள்வதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வேல் நம்பி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் தொகுதி தொடர்பில் பேராசிரியர் வேல்நம்பியை தொடர்புபடுத்தி வெளி வந்த செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார்.
குறிந்த செய்தி தொடர்பில் முகநூல் நபருருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.
பொலிஸ் விசாரணைகளில் இருந்து தப்புவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் தேவையற்ற விடயங்களை என் மீது சுமத்துவதற்காக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.