Sunday, Jan 19, 2025

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் வெளியிட்ட தகவல்

By jettamil

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் வெளியிட்ட தகவல்

கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று இளைஞனால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தினால் இலங்கையில் வாழும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு மாதக் குழந்தை உட்பட ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்ணின் கணவன் படுகாயமடைந்துள்ளார்.

24 65ea598e20cb1

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு 40 வயதான நபரும் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறிய தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக, தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது மகள், மற்றும் பிள்ளைகளை பார்க்க முடியாத துயரம் நேர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தை ஒன்றுக்கு கடந்த முதலாம் திகதி பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் தனக்கு அனுப்பி வைத்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு