Friday, Jan 17, 2025

கப்புட்டு காக்கா’ நூலை எழுதுங்கள்…! பஸிலிடம் வசந்த முதலிகே கோரிக்கை

By jettamil

கப்புட்டு காக்கா’ நூலை எழுதுங்கள்…! பஸிலிடம் வசந்த முதலிகே கோரிக்கை

சிறுவர் கதையாக ‘கப்புட்டு காக்கா‘ எனும் நூலை எழுதுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய ‘என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி’ என்ற புத்தகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்தார்.

பஸில் ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதால் சிறுவர் கதையாக ‘கப்புட்டு காக்கா’ எனும் நூலை எழுதுமாறு கோரிக்கை விடுப்பதுடன் அவரால் இதைச் செய்யமுடியும் எனவும் நகைச்சுவைப் பாணியில் கருத்து வெளியிட்டார்.

‘மிக்’ விமான கொடுக்கல் வாங்கல், ரணில் விக்கிரமசிங்கவைத் தலையில் தூக்கி வைத்துப் பயணிக்கும் அரசியல் பயணம் தொடர்பிலும் ராஜபக்சக்கள் நூலை எழுதினால் நல்லது. அப்போதுதான் கோத்தாபயவால் எழுதப்பட்ட நூல் முழுமை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு