Welcome to Jettamil

அரச ஊழியர் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

Share

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மாத்திரம் வழங்கினால் போதாது, அவர்களின் பயிற்சி குறித்தும் ஆராயப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

52 அரச நிறுவனங்களை அரசாங்கத்தில் இருந்து வெளியே எடுப்பது பற்றி பேசுவதற்குப் பதிலாக, அவற்றை திறம்பட நடத்துவதற்கான திட்டங்களை வகுப்பதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் பெரும் நெருக்கடி வரலாம் என்றும், பாடசாலை கல்வியிலும் உயர்கல்வியிலும் தீவிர சீர்திருத்தங்களைக் கோருவதாகவும், இந்தச் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் கல்வியிலும் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான பிரேரணையை ஏற்றுக்கொள்வதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட்டு தீர்க்க முடியாது எனவும் அதற்கு கருத்தியல் மாற்றம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை