நிலக்கரி கொள்வனவுக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த கொடுக்கல் வாங்கலின் வெளிப்படைத் தன்மை மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த விடயம் தொடர்பில் அவசர விசாரணை நடத்துவது தொடர்பில் சபாநாயகர் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.





