ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ராசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சி வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய மின் அமைப்பில் 120 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்போகிறது.
இதுதவிர குடிநீர் விநியோகம், விவசாய தேவைகளுக்கான நீர் விநியோகம் ஆகியவையும் இதன் கீழ் செய்யப்பட உள்ளது.