Welcome to Jettamil

யாழ். தேவி ரயில் சேவை – இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முற்பதிவு

Share

கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் யாழ். தேவி ரயிலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்துள்ளார்.

மாஹோ – ஓமந்தை இடையிலான வடக்கு ரயில் பாதையின் 128 கிலோமீற்றர் பகுதியில், தர மேம்படுத்தல் பணி முடிவடைந்துள்ள நிலையில், கடந்த சனிக் கிழமை முதல் மீண்டும் வடக்குக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குணசிங்க மேலும் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை