Welcome to Jettamil

யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 சிரேஷ்ட மாணவர்களும் பிணையில் விடுவிப்பு!

Share

யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 சிரேஷ்ட மாணவர்களும் பிணையில் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள், பகிடிவதைப் புரிந்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்தச் சம்பவம் பதிவாகியிருந்தது.

19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் நவம்பர் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன், சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை