Welcome to Jettamil

கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்

Share

கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் விநாயகர், நகுலேஸ்வர் நகுலாம்பிகை, முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானுக்கு அலங்கார தீபராதனை இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட மலர்தண்டிகையில் எம்பெருமான் வீற்றிருந்து உள்வீதியூடாக வலம் வந்தார். பின்னர் வெளிவீதியூடாக தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் பல பகுதியில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றதுடன் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை