ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர்,
“நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்தையும் பயன்படுத்துவேன். இதனை வெற்று பேச்சாக எடுத்து கொள்ளக்கூடாது.
மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பிரிக்கவும், பலவீனப்படுத்தி அழிக்கவும் முயற்சிக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையை கேட்கும் உக்ரைன், அந்நிய கூலிப்படையினர், வெளிநாட்டவர்கள், நேட்டோ பயிற்சி பெற்ற வெளிநாட்டு ராணுவ வீரர்களை அழைத்து வருகிறது.
ரஷ்ய வீரர்கள், ஒட்டுமொத்த மேற்கத்திய ராணுவ இயந்திரங்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயற்பட்டு வருகின்றன.
ரஷ்யாவிடம் அனைத்து வகையான ஆயுதங்கள் உள்ளன. அவை நேடோ வைத்திருக்கும் ஆயுதங்களை விட நவீன ரகம் வாய்ந்தவை.
எமது நாட்டின் பிராந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். ” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.