ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல், செப்டெம்பரில் மாகாண சபை தேர்தல்! – அநுர அரசின் தீர்மானம்
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும், செப்டெம்பர் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலும் நடைபெற இருப்பதாக, ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஊடகத்தின் தகவலின் அடிப்படையில், அரசின் திட்டமிடல் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகள் அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, கடந்த காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும், மேலும் மாகாண சபைத் தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று அரசின் திட்டமிடல் தெரிவிக்கின்றது.
இதற்கான சட்ட நடவடிக்கைகள் விரைந்து முடிக்கப் படுவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.