Friday, Jan 17, 2025

யாழில் அடுத்தடுத்து துயரம் – எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

By jettamil

யாழில் அடுத்தடுத்து துயரம் – எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ், கரவெட்டி பகுதியில் எலிக்காய்ச்சலால் 23 வயதான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி தல்லையம்பலம் பகுதியில் வசிப்பவரான கிருபாகரன் கிருசாந்தன் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:30 மணியளவில் உயிரிழந்தார்.

சுகயீனமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், அவரின் உடலில் நோய் அதிகரிக்க , யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு