கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதி
கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு, குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வருட இறுதியை முன்னிட்டு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஜீ7 நாடுகளில் கனடா பொருளாதார ரீதியில் சிறந்த நிலையில் காணப்படுகிறது.
அத்துடன், அண்மைக்காலமாக மக்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையினை கருத்திற் கொண்டு மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகின்றது.
மேலும், நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.