கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வீழ்ச்சியடைந்த கேக் விற்பனை
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக் விற்பனை ஐம்பது சதவீதம் குறைந்துள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இம்முறை ஒரு கிலோ கேக்கை வாங்கும் நபர் இருநூற்றி ஐம்பது கிராமுக்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த கொரோனா தொற்றின் பின்னர் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பல கிறிஸ்தவ தேவாலயங்களில் தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் கேக்குகள் கூட இந்த கிறிஸ்துமஸில் நிறுத்தப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தேவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.