Welcome to Jettamil

கன்னியா வெந்நீரூற்று விவகாரத்தில் எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை!

Share

கன்னியா வெந்நீரூற்று விவகாரத்தில் எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை!

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் எட்டப்பட்ட நீதிமன்ற இணக்கப்பாட்டை மீறிச் செயற்பட்டால், மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கன்னியா பகுதிக்கு இன்று (04) விஜயம் செய்த எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் சட்டத்தரணிகளுடன் இணைந்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார்.

2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின்படி, தொல்பொருள் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கலாம்; ஆனால் புதிய கட்டுமானங்களைச் செய்யக்கூடாது என்றும், அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பிள்ளையார் கோயிலை மீளக் கட்டலாம் என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

தற்போது அந்த மேட்டுப் பகுதியில் பேணிப் பாதுகாக்கும் பணிகளைத் தாண்டி, புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்துக் காணி உரிமையாளர் பொலிஸிலும் அரசாங்க அதிபரிடமும் முறையிட்டுள்ளார். நீதிமன்ற உடன்படிக்கையை மீறி தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதால், இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகச் சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை