வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் சிவன் ஆலயத்தின் மகோற்சவம் ஆரம்பம்!
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (18) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தொடர்ந்து எம்பெருமான் சமேதராக உள்வீதி, வெளிவீதியில் வலம்வந்து அருள்பாலித்தார்.
இன்று ஆரம்பாகிய கொடியேற்ற மஹோற்சவத்தினையடுத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.