மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பல தலைவர்கள் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் சுயாதீன அணியில் இணைந்து கொண்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளனர்.
பேராசிரியர் பீரிஸ் மற்றும் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுனவில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் எவ்வாறு இணைந்து செயற்படுகிறார்கள் என்பதை எதிர்காலத்தில், டலஸ் அழகப்பெருமவினால் அறிந்துகொள்ள முடியும் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.