இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதகமான எதுவும் நடக்காமல் இருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் பாதுகாப்பு என்று வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதகமான எதுவும் நடக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம், நாங்கள் அதை முன்னெடுப்போம். அதிலிருந்து எந்த அசைவும் இருக்காது.
அதனால்தான் முத்தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளிலும், பாதுகாப்புத் துறைக்கு வெளியே கடற்கொள்ளை , மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
இவை அனைத்தும் இந்தியாவுடனும் ஏனைய தீவு நாடுகளுடனும் நாம் ஒத்துழைக்கும் பயனுள்ள வழிகளாகும்.
சிறிய தீவுகளான, மாலைதீவுகளுடனான நட்பை நாங்கள் மதிக்கிறோம். மேலும் மாலைதீவு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்.
மூன்றாம் தரப்பினரைத் தாக்குவதற்கு வேறு எந்த நாடும் இலங்கையைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.
அத்துடன் எதிர்கால போர்க்களத்தில் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பாத்திரங்களை தீர்மானிக்க சரியான திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.