யாழ்ப்பாணம் உட்படப் பல பகுதிகளுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கை
இன்று மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழல் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
யாழ் உள்ளிட்ட வட பகுதி மக்களும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பலத்த மழை, இடி மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





