ட்ரம்ப் போட்ட அதிரடி உத்தரவு: காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு அவசர உத்தரவு !
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவிட்டதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்பின் இந்தப் பணிக்குப் பிறகு, மத்தியஸ்தர்கள் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும், பிடித்து வைத்துள்ள அனைத்து இஸ்ரேலியப் பணயக்கைதிகளையும் விடுவிக்கவும் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பணயக்கைதிகளை விடுவித்துவிட்டு, அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்தே ட்ரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கையை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை அவர் வரவேற்றுள்ளார்.
எனினும், இந்தத் தீர்மானத்தைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இன்னும் நிலவுவதால், பேச்சுவார்த்தைகள் அவசியப்படும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, ஹமாஸ் இறுதி ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், “இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகளை”ச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.





