Friday, Jan 17, 2025

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு

By kajee

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணிசார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான வீ.ஆனந்தசங்கரி, மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனந்த சங்கரி

*செல்வநாயகம் உயிரிழக்க அந்த பதவிக்கு முயற்சி செய்தமையால் தான் இந்த சாபக்கேடு

*தமிழரசுக்கட்சியை மூடிவிட்டு உருவாக்கியதே தமிழர் விடுதலைக்கூட்டணி

*அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியை தந்தைக்கு தெரியாமல் தனக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்பதற்காக மகன் தொடங்கியது

*தந்தை செல்வநாயகத்தின் வாரிசாக நான் தான் இன்று இருக்கிறன்

*வழக்கறிஞன் உள்ளிட்ட தொழிலை விட்டிட்டு என்னை எனது இனத்திற்காக அர்பணித்தேன் சில பேர் கேட்கிறார்கள் இவருக்கு இந்த வயதில என்ன தேர்தல் என்று சின்னமேளமா நடக்கிறது .இந்த வயதில் தான் புத்தி சொல்ல முடியும்

மயில் வாகனம் திலகராஜ்

*40 ஆண்டுகாலம் நாட்டில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை நாங்கள் அறிவோம் அதனையே வைத்துக்கொண்டு முன்கொண்டு செல்வதற்கான மாற்றான அரசியல் நாட்டில் தேவை அனுராதபுர கிராமத்திலிருந்து ஒரு இளம் அரசியல்வாதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

*அனுபவமும் புதுமையும் நிறைந்த ஒரு பாராளுமன்றமாக இருக்க வேண்டும்

*225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என கூறிய நாடு இது அந்த 225ற்குள் அனுராவும் இருந்திருக்கிறார்.

*தூய அரசாங்கம் நாட்டில் அமைய இருக்குமாக இருந்தால் அங்கம் வகிக்க முடியும்

*தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கள் இல்லை

*தமிழரசுக்கட்சி மலையக மக்களுக்கான தீர்வு என்ன என்பதை குறிப்பிடவில்லை

*தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்ய முடிந்ததா அந்த கூட்டமைப்பை விரிவு படுத்தி தமிழ் முஸ்லீம் மக்களை இணைத்து கொள்ள முடிந்ததா. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் நான் போட்டியிட்ட போது தமிழ் வேட்பாளரை நிறுத்தியவர்கள் எங்களுடன் பேச்சு கூட நடத்தவில்லை

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு