குரங்கு காய்ச்சலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் தொற்று, தற்போது ஐரோப்பாவை மையமாக கொண்டு 16 நாடுகளில் பரவி வருகிறது. இந்தக் குரங்கு காய்ச்சல் குறித்து அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பில் இந்த புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நோய் கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் காங்கோ வகைகளில் பரவுகிறது.மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையாக காங்கோ காணப்படுகின்றது இதன் இறப்பு விகிதம் 10 சதவீதமாகும். இந்த இரண்டு இனங்களில் பரவல் கூடியது கிழக்கு ஆப்பிரிக்க வகையாகும், இதன் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் ஆகும்.
இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால், தற்போது இலங்கையில் நோய் அபாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.